வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம்; இளம் சீரியல் நடிகர் மரணம்!.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகினர்கள்

Report
274Shares

இந்தியில் பிரபலமான டிவி சீரியல் நடிகர் சமீர் ஷர்மா (44). இவர் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

மும்பை மலாட் வெஸ்ட்டிலுள்ள அவரது வீட்டின் சமையல் அறையில் தூக்கிட்ட நிலையில் சமீர் ஷர்மாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையில் சமீரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சமீர் இறந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரிகிறது. மேலும் வீட்டில் துர்நாற்றம் வீசியதால் அருகில் உள்ளவர்கள் ஜன்னலைத் திறந்து பர்த்தபோது, சமீர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாகக் கூறியுள்ளனர். இச்சம்பவம் மீண்டும் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.