என்னைப் பார்த்து வியந்த நடிகர் விஜய்..! அவரிடம் நான் கூறியது இது தான்..?

Report
67Shares

1980ஸ் காலத்தில் முன்னணி நடிராக இருந்தவர் நடிகர் மோகன். இவர் நடித்த படங்கள் அதிகமாக ஹிட் படங்களாகவே அமைந்தது. தமிழில் 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இளையராஜாவின் சூப்பர்ஹிட் பாடல்கள் இவர் படங்களாக அமைந்தது. அதுவும் படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும்.

பின் இவரின் மார்கெட் சரிந்து பல ஆண்டுகளாகப் படங்களில் நடிக்காமலிருந்து வந்த இவர் தற்போது படத்தில் நடிப்பதற்குக் கதை கேட்டுள்ளதாகச் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறினார்.

மேலும் எனது வெற்றிக்குத் தனது காஸ்டியூமர் ராஜேந்திரன் தான் காரணம். அவர் தான் என்னை எல்லா படங்களிலும் அழகாக காண்பித்தார்.

எனது படங்களில் நான் போடும் காஸ்டியூம்களை பார்த்து நடிகர் விஜய் தனது காஸ்டியூமர் பற்றிக் கேட்டார்.

பின்னர் அவரை விஜயிடம் அறிமுகம் செய்து வைத்தேன். இதையடுத்து அவர் விஜய்க்கு காஸ்டியூமராகி விட்டார் என நடிகர் மோகன் தெரிவித்துள்ளார்.