திருமண ஜோடிக்கு நண்பர்கள் கொடுத்த வித்தியாசமான பரிசு..! என்னனு பாருங்க

Report
22Shares

இந்தியாவில், இந்த வருடம் மழை பருவம் தவறி பெய்த காரணத்தினால் வெங்காயத்தின் விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெங்காயத்திற்கு நாடு முழுவதும் மாபெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 180 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டு வந்தது.

இதனால் மக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பல இடங்களில் மர்மநபர்கள் சிலர் வெங்காய மூட்டைகளை திருடியும் சென்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் சமீபத்தில் சப்ரீனா மற்றும் ஷாகுல் என்பவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது திருமண மேடையில் ஷாகுலின் நண்பர்கள் அனைவரும் புதுமண தம்பதிகளுக்கு முழுவதும் வெங்காயத்தால் செய்யப்பட்ட பூந்தொட்டி ஒன்றை அன்பளிப்பாக அளித்துள்ளனர்.

இதானால் திருமண வீடே கலகலப்பாக்கியுள்ளது. மேலும் அவர்கள் போல செய்ய பயன்படுத்திய வெங்காயத்தின் மதிப்பு 600 ரூபாயாம்.

இந்நிலையில் அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.