இயக்குநர் பாலாவின் மகளா இது...? வைரலாகும் மகள் மற்றும் மனைவியின் புகைப்படம்..!

Report
100Shares

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான கதைகள் மூலம் திரைப்படங்களை வேறொரு கண்ணோட்டத்தில் காட்டி தனக்கென ஒரு இடம் பிடித்தவர் இயக்குநர் பாலா.

இவரது பெயரை கேட்டாலே, சில நடிகர், நடிகைகள் இன்றளவும் கொஞ்சம் பதட்டமடையத்தான் செய்வார்கள். அந்த அளவிற்கு மிகவும் ரப் அண்ட் டப்பான ஆளாக இருப்பவர். இவரது படங்கள் அனைத்தும் காலத்திற்கு நின்று பேசும் அளவிற்கு இருக்கும். அதை யாராலும் மறுக்கவும் இயலாது. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் போன்ற பல தரமான திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார்.

இவ்வளவு டெர்ரரான இயக்குநர் பாலா, நிஜ வாழ்க்கையில் மிகவும் நகைச் சுவையான மனிதர் என்று அவருடைய நண்பர்கள் சொல்வார்கள்.

இதுவரை பாலாவின் படங்கள் 6 தேசிய விருதுகளையும், 13 மாநில விருதுகளையும், 15 பிலிம்பேர் விருதுகளையும், 14 உலக அளவிலான விருதுகளையும் பெற்று உள்ளது.

இதனை தொடர்ந்து இயக்குனர் பாலா அவர்கள் அவர்கள் 2004 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி முதுமலர் என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது.

தற்போது, அவர்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.