திருமணம் முடிந்தாலும் ஆர்யாவிற்கு இருக்கும் பெரிய சிக்கல்...வெளியான அதிர்ச்சியான தகவல்!!

Report
41Shares

பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சியில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். இவருக்காக 16 பெண்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

இந்த பெண்கள் ஆர்யாவை காதல் செய்வது போலும், ஆர்யாவின் அன்பிற்கு சண்டை போடுவது போலவும் இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கிறார்கள். அதிலிருந்த சில பெண்களை எலிமினேட் செய்து வருகிறார். தற்போது அகாதா, சுசானா, சீதாலட்சுமி என 3 பெண்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்.

இந்த மூவரில் ஒருவரை மட்டும் தான் ஆர்யா திருமணம் செய்ய போகிறார். இந்த நிலையில், மூன்று பெண்களும் திருமணத்திற்கான உடைகளை தேர்தெடுத்துக் கொண்டு திருமணத்திற்கு தயாராகிவிட்டார்கள்.

திருமணத்திற்கு முன் நடக்கும், மெஹந்தி நிகழ்விற்காக தயாராகிறார்கள். அந்த வகையில், ஆர்யா இந்த நிகழ்ச்சியில் நிச்சயம் ஒருவரை திருமணம் செய்துகொண்டு குறைந்தபட்சம் 2 வருடமாவது வாழ வேண்டுமாம்.

இந்த விஷயங்களுக்கு ஒப்புக்கொண்டு தான் இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டுள்ளார். திருமணத்தில் அதிருப்தி ஏற்பட்டாலும், விவாகரத்து செய்யமுடியாது என்பது ஆர்யாவிற்கு கஷ்டமான விஷயம் தான். 2 வருடத்திற்கு அந்த பெண்ணுடன் வாழ்ந்து தான் ஆகவேண்டுமாம்.

1641 total views