ஒன்று சேர்ந்து பறக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்!! எங்கு தெரியுமா?

Report
233Shares

ஓவியா, ஜூலி, ரைசா வில்சன், சுஜா வருணி, சினேகன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் இசை எஃப்.எம். இசை திருவிழா மலேசியா, சிங்கப்பூரில் நடக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா, ஜூலி, சுஜா வருணி, ரைசா வில்சன், கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் இசை எஃப்.எம். இசை திருவிழா வரும் 17ம் தேதி மலேசியாவில் நடக்கிறது.

மறுநாள் அதாவது 18ம் தேதி இசை திருவிழா சிங்கப்பூரில் நடக்கிறது.

மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள ஸ்டார் Starxpo கேடபுள்யூசி ஃபேஷன் மாலில் மதியம் 3 மணி முதல் இரவு 11.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.மறுநாள் சிங்கப்பூரில் சன்டெக் கன்வென்ஷன் ஹாலில் மாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த தகவலை ஜூலி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஜூலியின் ட்வீட்டை பார்த்தவர்கள் சிங்கப்பூர், மலேசியா மக்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மேலும் சிங்கப்பூர், மலேசியாவுக்கு ஓவியா வருவதை அறிந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம் இசை திருவிழாவில் ஜூலி என்ன பாடுவார் என்ற கேள்வியையும் கேட்டுள்ளனர்.

8825 total views