சரவணா ஸ்டோர்ஸ் அதிபரின் பகீர் தகவல்!

Report
618Shares

நடிகர் சங்கத்தை சேர்ந்த சுமார் 350 நடிகர்கள் மலேசியாவுக்குச் சென்று நட்சத்திர கலைவிழாவினை நடத்திவருகின்றனர்.

நடிகர் சங்க கட்டிடத்தினை கட்ட முடிக்க நிதி சேகரிக்கவே இந்த கலை விழா நடத்தப்படுவதாக நடிகர் சங்க உறுப்பினர்கள் தெரிவித்து வரக்கூடிய சூழலில், அந்த நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்று நடிகர் சங்கத்திற்கு 2 கோடியே 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா அருள்.

அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருளிடத்தில் நீங்கள் திரைப்படத்தில் நடிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த அருள், நல்ல திரைக்கதை கிடைத்தால் நடிப்பேன் என பதில் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக, சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் அதன் உரிமையாளரே தோன்றி நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

23670 total views