ரஜினிக்குப் பின் புதிய ஸ்டைலில் அசத்தும் கண்டக்டர்கள்

Report
38Shares

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தினால் தற்காலிக நடத்துனராக பணிபுரிபவர்கள் புது ஸ்டைலில் டிக்கெட் கொடுக்கின்றனர்.

ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து நான்கு நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இதனால் போதிய பேருந்து வசதி இல்லாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். பல பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், வழக்கமாக நடத்துனர்கள் காக்கிச்சட்டையோ நீலச்சட்டையோ அணிவதைப் பார்த்திருப்போம். ஆனால், தற்காலிகாக ஓட்டுநர்களும் நடத்துனர்களும் ஜீன்ஸ், டி சர்ட் அணிந்து வந்து பேருந்தை ஓட்டுகின்றனர்.

சில நடத்துனர்கள் லுங்கி அணிந்து, சில்லறை போட மஞ்சப்பையுடன் வருகின்றனர். ரஜினி தனது டிக்கெட் கொடுக்கும் ஸ்டைலில் இயக்குனர் கே.பாலசந்தரை கவர்ந்தைப் போல இவர்கள் புதிய ட்ரெண்டை உருவாக்கி வருகின்றனர் என்று பயணிகள் கூறுகின்றனர்.

1637 total views