வடிவேலு பாணியில்- பொலிஸாரைத் தலைசுற்ற வைத்த மாணவன்!!

Report
308Shares

தாய்பெய் நகரில் படிக்கும் கல்லூரி மாணவன் ஒருவன், வடிவேலு பாணியில், தான் வைத்திருந்த தயிர் டப்பாவை காணவில்லை. அதனைக் கண்டுபிடித்து தரும் படி பொலிஸாரிடம் முறைப்பாடு கொடுத்துள்ளார்.

சீன கலாச்சாரக் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் தான் சாப்பிடுவதற்காக தயிர் டப்பா ஒன்றைத் தனது அறையில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து சாப்பிடுவதற்காக வந்த அவன் அதிர்ச்சியடைந்தான். தான் வைத்திருந்த தயிர் டப்பாவை காணவில்லை. இதனையடுத்து, உடனே தனது நண்பர்களிடம் தயிர் டப்பாவை எடுத்தீங்களா..? எனக் கேட்டுள்ளார்.

அவர்கள் இல்லையென மறுக்க பொலிஸ் நிலையம் சென்று தனது தயிர் டப்பாவை காணவில்லை என்றும், அதனை கண்டுப்பிடித்துத் தாருங்கள் என்று முறையிட்டான்.

அதிர்ந்து போன பொலிஸார் ஒருவழியாக அவனது வகுப்புக்குச் சென்று அதனைக் கண்டுப்பிடித்தனர். கண்டு பிடித்த அவர்களுக்கு காத்திருந்தது அடுத்த அதிர்ச்சி. அதில் இருந்த தயிரைக் காணவில்லை.

டப்பாவை எடுத்தது யாராக இருக்கும் என கண்டுப்பிடித்தே ஆகவேண்டும் என முரண்டு பிடித்த அந்த மாணவன், அந்த டப்பாவில் கைரேகை இருக்கிறதா என கேட்க அதில் கைரேகை இல்லை என மறுத்துள்ளனர் பொலிஸார். கடைசியில், டப்பாவிற்கு மரபணு சோதனையும் நடத்தப்பட்டது.

இறுதிவரை திருடனைக் கண்டுபிடிக்க முடியாத பொலிஸார் தலைசுற்றினர். இந்தத் தகவல் வெளிநாட்டு ஊடகங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

11757 total views