15 வயதிலேயே நடிகையாக களமிரங்கும் நடிகர் விக்ரமின் ரீல்மகள் சாரா அர்ஜூன்.. பணத்தில் புரள தயாராகும் நிலை?

Report
1801Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் விகரம். தன் உடலை கடுமையாக கட்டுக்கோப்பாகவும், சிரமங்களை கொடுத்து தாண்டி வந்த நடிகராக திகழ்ந்து வருகிறார்.

நடிப்பிற்காக உடலை கடுமையாக வருத்திக்கொள்பவர் நடிகர் விகரம். சேது, பிதாமகன், ஐ, உள்ளிட்ட படங்களுக்காக கஷ்டங்களை கொடுத்தவர். இதற்கிடையில் தெய்வத்திருமகன் என்ற படம் அவரின் உச்ச கட்டத்தை எடுத்துச் சென்றுள்ளது.

அப்படத்தில் அவரின் குழந்தையாக் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன். இப்படத்திற்கு பிறகு சைவம், விழித்திரு, சில்லு கருப்பட்டி போன்ற படத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் குழந்தை நட்சத்திரத்தில் இருந்து தற்போது நடிகையாக அறிமுகமாகியுள்ளார். பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கி வரும் வரலாற்று சிறப்புமிக்க பொன்னியின் செல்வம் படத்தில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்திற்கு பிறகு சாரா அர்ஜுனிற்கு படவாய்ப்புகள் குவிந்து வரும் என்றும் அஜித்பட அனிகாவை போன்று முன்னேற வேண்டும் என்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.