திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து இரட்டைகுழந்தை பெற்ற நடிகை.. சீரியல் நடிகர் வெளியிட்ட புகைப்படம்..

Report
590Shares

தமிழ் சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சாண்ட்ரா. மலையாள சினிமா நடிகையாக அறிமுகமானாலும் தமிழ் சினிமா மூலம் இவருக்கு பெரிய இடத்தினை கொடுத்தது. அதன்பின் பல படங்களில் கமிட்டாகி நடித்தார்.

சினிமா மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து இல்லத்தரசிகளை கவர்ந்து வந்தார். சில தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றியும் பெற்றார். அதன்பின் நடிகர் பிரஜினை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் வாழ்ந்து வந்தனர். இதை பொருட்படுத்தாமல் இருவரும் தங்கள் வேலையில் ஆர்வம் காட்டி வந்தனர்.

இந்நிலையில் இருவருக்கும் கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். 10 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்துள்ளதால் அவர்களின் புகைப்படத்தை வெளியிடாமல் வந்துள்ளனர் பிரஜினும் - சாண்ட்ராவும். இதற்கு காரணம் சாண்ட்ரா சில வருடங்களுக்கு முன் தன் தோழியின் குழந்தையை கையில் வைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் சிலர் உங்கள் குழந்தையா என்று கேட்கத்துவங்கினர். இதனால் கஷ்டப்பட்டேன் என்று பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

தற்போது இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடியுள்ளனர். இருவரின் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.