37 வயதில் மரணமடைந்த நடிகர், டாக்டர் சேது.. இறுதி சடங்கில் சோகத்தில் ஆழ்த்திய அழுகுரல்!..

Report
426Shares

கொரானா பாதிப்பால் உலகமே பதற்றத்துடன் இருக்கும் நிலையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து வருகிறார்கள். இந்நிலையில் தங்கள் பணிகளில் மக்களின் உயிரை காப்பாற்றும் நிலையில் இருப்பவர்கள் டாக்டர்கள். காலவரம்பில்லாமல் வேலை செய்யும் பொறுப்பிலும் இருக்கிறார்கள் டாக்டர்கள்.

கொரானா பாதிப்பில் இருக்கும் நிலையில் டாக்டராகவும் சில படங்களில் நடித்து நடிகராகவும் திகழ்ந்த நடிகர் சேதுராமன் கடந்த 26ஆம் தேதி இரவு இருதய அடைப்பால் மரணமடைந்துள்ளார். 37 வயதே ஆன சேதுராமன் சில தினங்களுக்கு முன் தான் கொரானா விழுப்புணர்வு வீடியோவை பகிர்ந்திருந்தார்.

இவரது இறப்பு தமிழ் சினிமாவையே அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. கொரானா பாதிப்பால் சந்தானம், நடிகை குஷ்பு உள்ளிட்ட ஒருசிலர் மட்டும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று இறுதி சடங்குகள் சென்னையில் அவரது உடலுக்கு செய்யப்பட்டது.

சேதுவின் உடலை இறுதி சடங்கிற்காக நடிகர் சந்தானமும் சுமந்து சென்றுள்ளார். தினமும் இந்த கேட் வழியாகத்தானே தினமும் போய் வருவ தங்கம் அய்யா என்று அவரது தாய் கதறி அழுதுள்ளார். இறுதி சடங்கில் சேதுவின் மனைவியின் அழுகுரலாலும் தயாலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.