எந்த நடிகரோடும் எனக்கு பிரச்சனையில்லை!.. நடிகர் கவுண்டமணி ரீவண்ட் ஓபன் டாக்ஸ்..

Report
270Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இவர் படங்களில் நடித்தால் பெரிய ஹிட்தான் என்று கூறும் அளவிற்கு தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பேசப்பட்ட நடிகராக இருப்பவர் நடிகர் கவுண்டமணி. சுமார் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் கவுண்டமணி. நடிகர், காமெடியன், வில்லன், குணச்சித்திர நடிகர் என்ற பல கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர்.

இவரை போன்று நடிக்க வேண்டும் என்று பலரும் கவுண்டமணியின் குரலை மிமிக்ரீ செய்தும் வருகிறாகள். இந்நிலையில் பல ஆண்டுகளாக நடிப்பதை தவிர்த்து வந்த கவுண்டமணி 2 வருடங்களுக்கு முன் வாய்மை என்ற படத்தில் நடித்தார். இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டிகொடுத்து பேசியது தற்போது சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இவ்வளவு காலம் நடிக்காமல் இருந்ததற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, ` நான் இரு வருடங்களாக தான் நடிக்காமல இருக்கிறேன். அது பத்திர்க்கையாளர்களுக்கு நீண்டகாலமாக தோனுகிறது என்று கூறினார்.

இதனால் தான் பேட்டியே கொடுக்காமல் இருக்கிறேன் என்று காமெடியாக பதிலளித்துள்ளார். மேலும் மற்ற மொழி படங்களை பார்க்க மாட்டேன். நான் தமிழ் படங்களே பார்க்க மாட்டேன். ஹாலிவுட் படங்களே விரும்பிப் பார்க்கிறேன் என்று கூறினார்.

தமிழ் படங்களை பார்க்கணும்னு அவசியம் என்ன இருக்கிறது என்று கூறியுள்ளார். `எல்லா நடிகர்களும் எனக்கு நண்பர்கள் தான்` என்று நடிகர் சந்தானம் வடிவேலு சந்தித்தால் பேசாமல் இருக்கிறீர்களே என்ற கேள்விக்கு பளிச்சென்று பதிலளித்துள்ளார்.

10239 total views