பிரபல திரைப்பட நடிகரும் இயக்குநருமான விசு 75 வயதில் காலமானார்.. இதுதான் காரணமா?..வெளியான தகவல்

Report
475Shares

தமிழ் சினிமாவில் லிஜெண்ட்டரி நடிகர் என்ற பெயர் பெற்றவர் நடிகர் விசு. நடிப்பை தவிர்த்து இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, தொகுப்பாளர் ஆகியவற்றை சினிமாத்துறையில் பணியாற்றியவர். மேடை நாடகம், தொலைக்காட்சி சீரியல் மற்றும் கருத்து நாடகங்களில் நடித்து பிரபலமானார்.

இதன்பின் கண்மணி பூங்கா, கயிறு, ரகசியம், புதிய சகாப்தம், தங்கமணி ரங்கமணி ஆகிய படங்களில் இயக்கியதன் பெயரில் இயக்குநர் அவதாரம் எடுத்து வந்தார். தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததோடு, நிகழ்ச்சிகளை தொகுத்தும் வந்துள்ளார்.

இதைதொடர்ந்து திருமணம் செய்து கொண்டு மூன்று மகள்களை பெற்றெடுத்து அமெரிக்காவில் மூவரும் செட்டிலாகி வந்துள்ளனர். நெற்றிக்கண் படத்தின் ரீமேக்கை தனுஷ் எடுக்கப்போவதாக கூறி அதற்கு எதிராக அறிக்கையும் வெளியிட்டிருந்தார் விசு. இந்நிலையில் 75 வயதாகும் விசு சிறுநீரக பிரச்சனையால் பாதிப்படைந்து அவதியுற்றிருந்தார்.

இன்று சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளது திரைத்துறையில் அதிர்ச்சியில் ஆளாக்கியுள்ளது. கொரானா வைரஸ் அச்சத்தால் ஊரடங்கில் இருக்கும் சமயத்தில் நடிகர் விசு இறந்ததை கேள்விபட்டு பிரபலங்கள் இரங்களை தெரிவித்து வருகிறார்கள்.