புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுக்கும் திரிஷா... சம்பளத்தை திருப்பி கேட்கும் தயாரிப்பாளர்..

Report
306Shares

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்குபவர் நடிகை திரிஷா. கடைசியாக இவர் நடித்த 96 திரைப்படம் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது 24 ஹவர்ஸ் புரொடக்‌ஷ்ன் தயாரிப்பில் திருஞானம் இயக்கியுள்ள பரமபதம் விளையாட்டு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்துள்ளது. அதில் நடிகரும் தயாரிப்பாளருமான டி.சிவா நடிகை திரிஷாவை எச்சரித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசியாதவது : “படம் நன்றாக வந்துள்ளது, இப்படிப்பட்ட படத்தின் விளம்பரத்திற்கு திரிஷா வரவில்லையென்பது வருத்தமளிகிறது, இதேபோல் தொடர்ந்து அவர் விளம்பரத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பி தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன்” என கூறியுள்ளார்.

10804 total views