தர்பார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்!.. ரசிகர்கள் கோபத்திற்கு முற்றுபுள்ளி வைத்த படக்குழு..

Report
233Shares

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தர்பார். இப்படம் நேற்று உலகளவில் பிரமாண்டமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

படம் வெளியானதிலிருந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றது. படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கக்கோரி பிரபல அரசியல் பிரமுகர் தரப்பு வழக்கறிஞர் ஒருவர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது, தர்பார் படத்தின் தயாரித்த லைக்கா நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் " எங்களின் திரைப்படத்தில் கைதிகள் சிறையை விட்டு வெளியே செல்வது போன்ற வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

மேலும் குறிப்பிட்ட வார்த்தைகள் யார் மனதையாவது புண்படுத்தும் வகையிலிருந்தால். அந்த காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்". எனப் பதிவிட்டுள்ளனர்.

8974 total views