அஜித்தின் தந்தைக்கு என்னவானது.. கமல் 60க்கு தல தளபதி வராததற்கு இது தான் காரணமா..? உண்மையை உடைத்த மனோபாலா..

Report
779Shares
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கமல், ரஜினிக்கு அடித்தபடியாக இருப்பவர்கள், விஜய், அஜித். இவர்களுக்கென்று தனித்தனியா ரசிகர்கள் பட்டாளம் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற கமல்ஹாசனின் 60வது ஆண்டு சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வகையில் சினிமா பிரபலங்கள் கூடி மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் வருகை தந்து சிறப்புரை ஆற்றி கமலை புகழ்ந்து பேசினார். அதன்பின் பல பிரபலங்கள் கமலின் நெருக்கியாக சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் நிகழ்ச்சிக்கு விஜய், அஜித் ஏன் வரவில்லை என்று கேள்வி கேட்டு வந்துள்ளனர். இதற்கு இருவரின் தரப்பிலும் பதில் வரவில்லை.

இதற்கு பதிலளிக்கும் வகையாக இயக்குநரும், காமெடி நடிகருமாக நடிகர் மனோபாலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் ஏன் வரவில்லை என்றால் தளபதி64 படபிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. அங்கு காற்று மாசு ஏற்பட்டு வருவதால் அதனால் தான் வரவில்லை என்று கூறினார்.

அதன்பின் அஜித் வராததற்கு அவரது தந்தை உடல்நிலை குறைவாக அவதியுறுவதால் வரமுடியவில்லை. தன் தந்தையை கூட இருந்து பார்த்துக்கொள்வதால் கமல் 60க்கு வரமுடியாமல் போனது என்றும் கூறினார். இதுதான் உண்மையான காரணம் என்று மனோபாலா கூறியுள்ளார். அதன் வீடியோ இதோ..