
பாலிவுட் திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் கதாநாயகி தான் பிரியங்கா சோப்ரா. இவர் பாலிவுட் மட்டுமல்லாமல் ஹோலிவுட்டில் கூட தற்போது வளர்ந்து வரும் கதாநாயகியாக இருந்து வருகிறார்.
மேலும், சென்ற வருடம் அமெரிக்காவை சேர்ந்த 'நிக் ஜொனாஸ்' என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பிரியங்கா தன் கணவருடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.
இந்நிலையில் முதலாமாண்டு திருமண நாளை கொண்டாட தயாராகி வருகிறார்கள். மேலும், திருமண நாளை முன்னிட்டு இவர்கள் அமெரிக்காவில் 'லாஸ் ஏஞ்சல்ஸ்' பகுதியில் சொந்தமாக வீடு வாங்கியுள்ளார்.
பிரம்மாண்டமாக 20 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டின் விலை 20 மில்லியன் டாலர் என்று கூறுகிறார்கள். இந்திய நாட்டின் விளைப்படி பார்த்தல் ருபாய் '144 கோடி' வருகிறது என்று கூறப்படுகிறது.
இந்த பிரமாண்ட ஆடம்பர வீட்டில் 11 குளியலறைகள், 7 படுக்கை அறைகள், நீச்சல் குளம், கிரிக்கெட் பவுலிங் அரங்கம், பார் மற்றும் ரெஸ்டாரெண்ட், சினிமா தியேட்டர், உடல் மயிற்சி மையம் போன்ற வசதிகள் உள்ளன.
இருவர் தங்கும் வீட்டிற்கு இப்படிப்பட்ட ஆடம்பரம் தேவையா என்று இணையதளங்களில் இந்த செய்தியை பரவலாக வைரலாகி வருகிறார்கள் இவரகளது ரசிகர்கள்.
Happy Diwali to everyone celebrating. From mine to yours... दीपावाली की शुभकामनाएँ।। #diwaliincabo #peaceandprosperity pic.twitter.com/7AmKUBDltD
— PRIYANKA (@priyankachopra) October 27, 2019