கர்ப்பமாக இருக்கும்போது ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த பிரபல நடிகை.. சோகத்தில் சினிமா பிரபலங்கள்..

Report
263Shares

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர் தான் பூஜா சுன்ஜார். மராட்டிய படங்களில் இவர் சில திரை படங்கள் நடித்து வருகிறார். பூஜா கர்ப்பமாக இருந்த காரணத்தினால் கடந்த சில மாதங்களாக எந்த ஒரு படத்திலும் இவர் நடிக்கவில்லை. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு இவரது உறவினர்கள் கேரேகான் நகரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்துள்ளனர்.

அங்கு பூஜாவின் குழந்தை பிறந்தவுடன் ஒரு சில நிமிடங்களிலேயே இறந்துவிட்டது. இதைதொடர்ந்து பூஜாவின் உடல் நிலையும் சரி இல்லாத காரணத்தினால் அவரை ஹிங்கோலியில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். பூஜாவின் உறவினர்கள் அவரை கொண்டு செல்வதற்கு ஆம்புலன்சிற்க்காக ஒரு மணிநேரம் அலைந்தனர்.

ஒரு மணி நேரம் கழித்து ஆம்புலன்ஸில் பூஜாவை கொண்டு சென்றனர். ஹிங்கோலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் இழந்து விட்டார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஒரு நடிகைக்கே இப்படி ஒரு நிலைமை என்றால் நாம் என்ன ஆவோம் என்று மகாராஷ்டிரா மாநிலமே இந்த செய்தியை கேட்டு அச்சத்தில் உள்ளனர்.