டெங்குவால் பலியான குழந்தை நட்சத்திரம்.. அதிர்ச்சியில் சினிமாத்துறை..

Report
467Shares

மழைக்காலமாக இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பலபேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காக தமிழக அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. டெங்குவால சிலர் உயிரிழந்தும் வருகிறார்கள்.

இந்நிலையில் தெலுங்கில் பிரபல நடிகர் பால கிருஷ்ணாவைபோல் நடித்து ஸ்டாண்ட் அப் காமெடிகளை செய்து வந்த சிறுவன் கோகுல் சாய்கிருஷ்ணா. ஜூனியர் பால கிருஷ்ணா என்று தெலுங்கு மக்களால் புகழடைந்த குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்தான்.

சமீபகாலமாக காய்ச்சலால் அவதியுற்ற சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதையடுத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை பெற்று வந்த சாபாலகிருஷ்ணா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

இத்தகவலால் திரையுலகில் அனைவரும் இரங்கலை தெரிவித்தும் வருகிறார்கள். இதை கேள்விப்பட்ட நடிகர் பாலகிருஷ்ணா அவரது இறப்பை சமூகவலைத்தளத்தில் இரங்களை தெரிவித்தும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

12621 total views