ரஜினி கைவிரித்துவிட்டதால் விஜய்க்கு எமனாக மாறிய அரசியல் பேச்சு.. முதல்வர் கைகெழுத்தில் பிகில் படம்..

Report
19Shares

தென்னிந்திய முன்னணி நடிகராக இருந்து அனைத்துவித சமுக கருத்துக்களையும் தன் படத்தால் மக்களிடம் சேர்த்து வருபவர் நடிகர் விஜய். இவர் படங்களில் இசைவெளியீட்டு விழாவில் அரசியல் பேசியும், அரசியல் வருகை பற்றியும் சர்ச்சையாக பேசி ரசிகரகளை உச்சிக்கே கொண்டு சென்றார்.

அதேபோல் தற்போது நடித்து வெளியாகவுள்ள பிகில் பட இசைவெளியீட்டு விழாவிலும் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் பேசி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அளரவிட்டார்.

இதன் எதிரொலியாக பிகில் படத்தின் சென்சார் சான்றிதழ் இன்னும் அறிவுக்கபடாமல் இருப்பதே. தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்த நிலையில், இன்னும் சென்சார் போர்டில் படத்தின் பெயர் இடம்பெறவில்லையாம். இதற்கு காரணம் விஜய்யின் இசைவெளியீட்டு விழா பேச்சு.

அனைத்து தமிழக அமைச்சர்களையும் கோபத்தில் ஆழ்த்தியதால் இதன் வெளிப்பாடாக அமைந்தது என்று கருதுகிறார்கள். இதை சமாளிக்க தானே முன்வந்து பிரச்சனையை சரிசெய்ய விஜய் முடிவெடுத்துள்ளார்.

இதுபற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கேட்க இதுபற்றி என்னால் ஒன்னும் செய்யமுடியாது என்று கைவிரித்துவிட்டாராம். இதனால் முதல்வர் எடப்பாடியை சந்திக்க திட்டம் தீட்டியுள்ளார். இது எவ்வித பலனை தரும் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.