இறுதி விழாவில் மதுமிதா கணவர் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ..

Report
608Shares

பிக்பாஸ் 3 சீசன் முடிவடைந்து வெற்றியாளராக முகன் ராவ் அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடமாக சாண்டியும், மூன்றாவது இடம் லாஸ்லியாவும், நான்காம் இடம் ஷெரினும் மக்கள் ஓட்டுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ம்துமிதா, சரவணன் இருவரும் தவிர்த்து அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டு வெற்றிபெற்ற முகனுக்கு வாழ்த்துக்களோடு மகிழ்ச்சியை கொண்டாடினர்.

இந்நிலையில் மதுமிதா ஏன் வரவில்லை?, பிக்பாஸ் அவரை அழைக்கவில்லையா? என்ற கேள்விகள் சமுகவலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பிக்பாஸ் குழுவின் மேல் சிலர் கோபப்பட்டு திட்டியும் வந்தனர்.


தற்போது மதுமிதாவின் கணவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நான் வந்தேன் அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் இறுதி விழாவின் முன் பக்கமாக போட்டியாளர்களின் உறவினர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த மதுமிதாவின் ரசிகர்கள் அந்த காட்சியை சமுகவலைத்தளத்தில் பரப்பி வைரலாக்கி வருகிறார்கள்.