தன் மகள் இறந்ததை பற்றி மனமுடைந்து கூறிய பாடகி சித்ரா.. ரகசியத்தை உடைத்த சம்பவம்...

Report
24Shares

தமிழ் சினிமாவில் இன்றைய காலகட்டம் வரை தன் குரலால் அனைவரையும் ஈர்த்து வருபவர் பாடகி கே.எஸ். சித்ரா. இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பாடிய ஒரே பாடகி என்ற சாதனையோடு, சுமார் 25000 பாடலுக்கு மேல் பாடியுள்ளார்.

இவருடைய மகள் நந்தனா கடந்த 2011 ஆம் ஆண்டு இறந்துள்ளார். மகள் இறந்த தருணத்தை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியொன்றில் உருக்கமாக கூறியுள்ளார். தன் மகள் 7 வயதாக இருக்கும் போது பாடல் கச்சேரிக்காக துபாய்க்கு சென்று இருந்தோம்.

அங்கு எமிரேட்ஸ் ஹில்ஸ் என்ற ஹோட்டலில் தங்கிய நேரத்தில் நாம் என் மகளை தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்க்கவைத்துவிட்டு குளிக்கச் சென்றேன். அந்நேரத்தில் மகள் நந்தனா யாரும் எதிர்பார்க்கமுடியாத நேரத்தில் ஹோட்டலில் இருக்கும் நீச்சல் குளத்தின் கதவை திறந்து விழுந்துள்ளார். தண்ணீரில் விழுந்த மகள் உயிரிழந்தாள் என்று கூறினார்.

மிகப்பெரிய கதவை எப்படி திறந்து போகமுடியும் என்ற கேள்வி இன்னமும் இருக்கிறது என்று கூறினார். அதன்பின் போலிசார் விசாரணையில் என் மகளின் காலடி தடம் அங்கிருந்தது தெரியவந்தது. இல்லை என்றால் நாங்கள் சிறைக்கு சென்றிருப்போம்.

இப்படி கூறி மனவேதனையுடம் பேட்டியை முடித்துக் கொண்டார் சித்ரா.

1094 total views