திருமணம் செய்வதாக கூறி இளைஞரிடம் 45 லட்சம் சுருட்டிய தமிழ் நடிகை..

Report
32Shares

ஜெர்மனியில் பணி புரியும் சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மேட்ரிமோனியல் திருமண தகவல் மையத்தில் சுருதி என்ற இளம்பெண்ணிடம் பழக்கமானார். அவர் ஆடிபோனா ஆவணி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர்.

சில நாட்களில் சுருதியை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் மூன்று மாதத்தில் சுருதி அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று பாலமுருகனிடம் 45 லட்சம் பணம் கேட்டுள்ளார். வருங்கால மனைவிதானே கேட்கிறார் என்று பணத்தை கொடுத்துள்ளார்.

பணம் வாங்கி சில நாட்களில் இளைஞரின் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த அந்த இளைஞர் போலிசில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலிசார் சுருதி, அவரது வளர்ப்பு தாய், தந்தை ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் பல வெளிநாட்டு தமிழர்களை ஏமாற்றியது தெரியவந்தது. அதன்பின் ஜாமீனி வெளிவந்த சுருதி என்னை பற்றி தவராக இணையத்தில் செய்தி வெளியாகியும், புகைப்படத்தை வெளியிட்டதாகவும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

6 வாரங்களில் சுருதியின் கோரிக்கை மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

990 total views