ஸ்ரீதேவி மரணத்தால் நின்றுபோன பிரபல நடிகையின் திருமணம்...!!

Report
117Shares

தமிழ் மொழியில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்த நடிகை ஸ்ரீதேவி. பின் பாலிவுட் திரையுலகமே வியர்ந்து பார்க்கும் அளவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையாக உயர்ந்தார்.

இவர் கடந்த வாரம், 24 ஆம் தேதி துபாயில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. இவருடைய மரணம் இன்று வரை பலராலும் நம்ப முடியாத ஒரு நிகழ்வாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் இவருடைய மரணத்தால் பிரபல நடிகையின் திருமணம் நின்று விட்டதாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பி அனில் கபூரின் மகள் நடிகை சோனம் கபூர் கடந்த இரு வருடங்களாக தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை காதலித்து வருகிறார்.

எனவே இவர்கள் இருவருக்கும் திருமணம்செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஸ்ரீதேவியின் இறப்பால் திருமணத்தை தள்ளிவைத்துள்ளனராம் குடும்பத்தினர். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

4667 total views