அஜித் படத்தில் வந்ததை நிஜத்தில் செய்து காட்டிய சாய்பல்லவி

Report
41Shares

டிராபிக் ஜாமில் சிக்கியதால் தனது உதவியாளருடன் பைக்கில் சினிமா நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார் சாய் பல்லவி.மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வந்த சாய் பல்லவி முதன் முதலாக தமிழில் ஹீரோயினாக நடித்துள்ள படம் கரு. ஏ. எல். விஜய் இயக்கியுள்ள இந்த படம் கனம் என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகிறது.

கனம் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது. சாய் பல்லவி பட்டுப்புடவை உடுத்தி நிகழ்ச்சிக்கு காரில் கிளம்பிச் சென்றார். ஆனால் வழியில் டிராபிக் ஜாமில் சிக்கிக் கொண்டார்.

டிராபிக் ஜாமில் சிக்கியதால் நிகழ்ச்சிக்கு லேட்டாவதை உணர்ந்தார் சாய் பல்லவி. உடனே காரில் இருந்து இறங்கி தனது உதவியாளருடன் பைக்கில் நிகழ்ச்சிக்கு சென்றார்.

சாய் பல்லவி தனது உதவியாளருடன் பைக்கில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டார் சாய் பல்லவி.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நாயகி பூஜா பட்ரா விருது விழாவுக்கு லேட்டாவதால் தனது பட இயக்குனரான அஜீத்தின் பைக்கில் சென்றார். படத்தில் நடந்ததுபோன்று தற்போது நிஜத்திலும் நடந்துள்ளது.

1509 total views