ஜூலியின் அடுத்த அவதாரம்..பாத்தா ஷாக் ஆகிடுவீங்க

Report
57Shares

தமிழகத்தில் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த அனிதா என்ற பெண் நீட் தேர்வினால் தன்னுடைய மருத்துவ கனவு நிறைவேறாமல் போனதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

கல்விக்காக போராடி தன் உயிரை மாய்த்து கொண்ட போராளியான அனிதாவை அவ்வளவு எளிதாக தமிழக மக்களால் மறந்து விட முடியாது. தற்போது அனிதாவின் வாழ்க்கையை படமாக்க உள்ளனர்.

இதில் பிக் பாஸ் ஜூலி அனிதாவாக நடிக்க உள்ளார். இதனை அவரே ட்விட்டரில் அறிவித்தும் உள்ளார். இதனையடுத்து ஜூலி ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மேலும் இவர் ஏற்கனவே K7 புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உத்தமி என்ற படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

3147 total views