ஆண்பாவம் படத்தில் நடித்த கருப்பாயி பாட்டியின் தற்போதைய பரிதாப நிலை என்னனு தெரியுமா?

Report
120Shares

பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் கொல்லங்குடி கருப்பாயி. அதன்பிறகு சில படங்களில் நடித்தார். சினிமாவில் பல பாடல்களையும் பாடியுள்ளார். சினிமாவை விட ஏராளமான நாட்டுப்புற பாடல்களை பாடியிருக்கிறார்.

தற்போது சினிமாவில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார். சென்னை லயோலா கல்லூரி மாணவர் அரவணைப்பு மையம், மாற்று ஊடக மையம், ஓன்.ஜி.ஜி.சி ஆகியவை இணைந்து நாட்டுப்புற கலைஞர்களை கவுரவிக்கும் விழா ஒன்றை நடத்தியது.

இதில் கலந்து கொள்ள வந்திருந்த கொல்லங்குடி கருப்பாயி நிருபர்களிடம் கூறியதாவது:குறைவான சினிமாவில் நடித்திருக்கிறேன். சினிமாவில் குறைவாகத்தான் பாடியிருக்கிறேன்.

ஆனால் நாட்டுப்புற பாடல்களை மேடை தோறும் பாடிவந்தேன். சினிமாவால் நல்ல புகழ் கிடைத்தது. ஆனால் சினிமாவில் கிடைத்த வருமானம் போதவில்லை. அன்றாட செலவுகளுக்கே சினிமா வருமானம் பயன்பட்டது. இப்போது அதுவும் இல்லை.

தம்பி விஷால் ஏற்பாட்டில் நடிகர் சங்கம் மாதம் 4 ஆயிரம் உதவித் தொகை வழங்கி வருகிறது. அதை வைத்து வாழ்ந்து வருகிறேன். நான் குடியிருக்கும் வீடு எப்போது இடிந்து விழுமோ என்கிற நிலையில் இருக்கிறது. அதனால் உயிர் பயத்துடனும், அச்சத்துடனும் வாழ்ந்து வருகிறேன்.

எனது தூரத்து சொந்தத்திலிருந்து ஒரு பேத்தி என்னை பராமரித்து வருகிறார். எல்லோரும் சினிமாகாரர்களிடம் உதவி கேட்க சொல்கிறார்கள். நான் யாரிடமும் இதுவரை உதவி கேட்கவில்லை. இனி கேட்கவும் மாட்டேன்.

5574 total views