ராகுல் ப்ரீத் சிங்கால் அப்செட்டான சாய் பல்லவி

Report
31Shares

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் துவக்கவிழா ஜனவரி 1-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில் 'பிரேமம்' மலையாளப் படத்தில் நடித்து புகழ்பெற்ற சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில், இன்னொரு கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்த ரகுல் ப்ரீத் சிங்குக்கு 1 கோடி சம்பளம் கொடுத்தனர்.

காரணம் தெலுங்கு ரைட்ஸ் பிசினஸ் பண்ண ரகுல் ப்ரீத் சிங் படத்தில் இருந்தது பெரிதும் உதவியது.அதே கான்செப்ட்டில் தான் தற்போது சூர்யா நடிக்கும் படத்திலும் ரகுல் ப்ரீத் சிங்கை கதாநாயகியாக்கியுள்ளனர்.

தற்போதைய தகவலின்படி, படத்தில் ரகுல் ப்ரீத் சிங்குக்குத்தான் முக்கியத்துவமாம். சாய்பல்லவிக்கு ப்ளாஷ்பேக்கில் வரும் கேரக்டர் என்கிறார்கள். இதனால் சாய் பல்லவி அப்செட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1702 total views