விஜய் படத்தின் வசூலை கேட்டு கிண்டலாக சிரித்த பிரபல தயாரிப்பாளர்.. அந்த நபரை பற்றி பேச கூட விரும்பாத கே.ராஜன்..

Report
83Shares

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் கூட்டணியில் தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் வெளியான திரைப்படம் "தெறி" , இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தெறி திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகள் செய்தாக படத்தின் தயாரிப்பாளர் தாணு பல பேட்டிகளில் கூறியிருந்தார். 6 நாட்களில் 100 கோடி வசூல் செய்தாகவும்படத்தின் போஸ்டர்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் கே.ராஜன் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது தொகுப்பாளர் தெறி திரைப்படம் 4 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளது என்று படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளாரே, என கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு கிண்டலடிக்கும் வகையில் சிரித்து காட்டி "வேறு ஏதும் கேள்வி இருந்தால் கேளுங்கள்" என கே.ராஜன் கூறினார். மேலும் "இப்படி தான் சினிமாவையும், ஹீரோவையும் கெடுக்கிறார்கள், 18 கோடியில் சம்பளம் வாங்குபவர்களை 28 கோடி வாங்குபடி செய்தவர் யார் ?, மேற்கொண்டு கேளுங்கள் அந்த நபரை நான் பேச விருப்பவில்லை" என கூறியுள்ளார்.