பரவை முனியம்மா பாட்டி என்ன செய்திருக்கிறார் பாருங்க! வைரலாகும் புகைப்படங்கள் - கூடியது மக்கள் கூட்டம்

Report
905Shares

கிராமத்து விருந்து என்ற நிகழ்ச்சியில் அசைவ உணவுகளை சமைக்க சொல்லிக்கொடுத்து டிவியில் பிரபலமானவர் பரவை முனியம்மா பாட்டி.

கிராமங்களில் இன்னும் கோவில் திருவிழாக்களில் நாட்டுப்புற பாடகியான அவரின் குரல் பாடல்களாக இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

வயது முதுமையின் காரணமாக தற்போது மதுரையில் உள்ள வீட்டில் முழு ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சைக்கு போதிய பணமில்லாமல் சிரமப்பட்டு வந்த அவரை நடிகர் அபி சரவணன் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து விட்டிற்கு நல்லபடியாக அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் அபிசரவணன் நடிப்பில் மாயநதி படம் வெளியானது. இந்த படத்தை பார்க்க பரவை முனியம்மா பாட்டியை தியேட்டருக்கு அழைத்து சென்றுள்ளார் அவர்.

பொது இடத்தில் அவரை கண்டதும் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.