"அன்று இரவு பார்ட்டியில் இது தான் நடந்தது" உண்மையை போட்டுடைத்த சனம் செட்டியின் முன்னாள் காதலர்..

Report
872Shares

பிக்பாஸ் சீசன் 3யின் போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷன் மீது அவரின் முன்னாள் காதலியும், மாடலுமான சனம் செட்டி சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தன்னை நிச்சயதார்த்தம் செய்துவிட்டு பின்னர் திருமணம் செய்ய மறுப்பதாகவும், தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

இதனை மறுத்திருந்த தர்ஷன் தன்னை சனம் செட்டி டார்ச்சர் செய்வதாகவும், பிக்பாஸ் ரம்யா திருமணத்திற்கு சென்றிருந்த சனம் செட்டி, அவரது முன்னாள் காதலரான அஜய் என்பருடன் சனம் செட்டி ஒரு இரவு ரூம் போட்டு தங்கியிருந்தார்கள். எனவே நான் அவரை நிச்சயம் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என தர்ஷன் கூறியிருந்தார்.

இந்நிலையில் தர்ஷனின் இந்த குற்றச்சாட்டை கேட்டு கோபமடைந்த சனம் செட்டியின் முன்னாள் காதலர் அஜய். "நான் பிக்பாஸ் ரம்யா திருமணத்திற்கு சென்றது உண்மை தான், அங்கு சனம் செட்டியும் இருந்தார்.

ஆனால் நாங்கள் ஒன்றாக இல்லை, ஏன் நாங்கள் பேசிக்கொள்ள கூட இல்லை" என ஓப்பனாக பதிலளித்துள்ளார் அஜய்.