தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக எல்லோராலும் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. அவரின் அடுத்த படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
அதே வேளையில் அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வருவது பலரும் அறிந்த ஒன்று. இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என மொத்த திரையுலகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
இந்த அழகான காதல் ஜோடி அண்மைகாலமாக அடிக்கடி பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள். இதில் கோவில்கள் அடங்கும். தற்போது புகழ் பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடிகை இருவரும் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனால் ரசிகர்கள் திருமணத்திற்கு முன்பே இப்படி கோவில் கோவிலாக செல்வதேன்? என தூண்டி தூண்டி கேள்வி கேட்டு வருகிறார்கள்.
11218 total views