பொது மேடையிலேயே அட்லீயை அசிங்கப்படுத்திய பிரபல இயக்குனர், என்ன இப்படி சொல்லிட்டாரு!

Report
369Shares

அட்லீ இன்று பாலிவுட்டே வியந்து பார்க்கும் இயக்குனராகிவிட்டார். ஷாருக்கான், ரன்வீர் சிங் என பல பாலிவுட் நட்சத்திரங்கள் இவர் இயக்கத்தில் நடிக்க காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்க அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வந்த பிகில் மிகப்பெரும் வசூல் சாதனை செய்தாலும், அதிகமான பட்ஜெட்டால் படம் போட்ட பணத்தை எடுக்க தடுமாறுகின்றது.

இந்நிலையில் அட்லீயை பலரும் இவர் பட்ஜெட் அதிகப்படுத்தியதால் தான் இப்படி விநியோகஸ்தர்கள் கஷ்டப்படுகின்றனர் என கூறி வருகின்றனர்.

தற்போது இயக்குனர் சுந்தர்.சி ஒரு நிகழ்வில் ‘தற்போதுள்ள இளம் இயக்குனர்கள் ஹீரோக்களை குஷிப்படுத்த தான் காட்சிகளை வைக்கின்றனர்.

அதோடு பட்ஜெட்டை பல மடங்கு அதிகமாக்குகின்றனர், இதெல்லாம் கடும் நஷ்டத்தை தான் சந்திக்க வைக்கும்’ என மறைமுகமாக அட்லீயை தாக்கியுள்ளார்.