அனைவரையும் மயக்கிய பிரபல பாடகி காணாமல் போனாரா! எங்கே போனார்? என்ன ஆனார்?

Report
365Shares

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகிகள் சினிமாவில் முகம் பார்க்கா முடியாவிட்டாலும் பலரின் குரல் இன்னும் மக்கள் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

அதில் ஒருவர் பாடகி மின்மினி. மணிரத்னம் இயக்கத்தில் ரஹ்மான் இசையமைப்பில் ரோஜா படத்தில் வந்த சின்னச்சின்ன ஆசை பாடல். இன்னும் பள்ளிக்கூட விழாக்களில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கின்றன.

இப்பாடலுக்கு பிறகே மின்மினி யார் என பலருக்கும் தெரியவந்தது. பின்னர் அரண்மனைக்கிளி படத்தின் அடி பூங்குயிலே, சின்ன மாப்பிள்ளை படத்தில் கண்மனிக்குள் சின்ன சின்ன மின்மினிகள் பாடல், எங்க தம்பி படத்தின் மலையோரம் மாங்குருவி என பல பாடல்கள் சூப்பர் ஹிட் தான்.

அண்மைகாலமாக இவர் என்ன ஆனார்? எப்படி இருக்கிறார்? என செய்திகள் இடம் பெற்று வருகிறது.

இந்நிலையில் இசை விமர்சகர் ஷாஜி என்பவர் மின்மினி மீண்டும் பாடத்தயார். அவரது குரலை இசையமைப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ள தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்படி பாட்டு உலகில் அன்று கொடி கட்டி பறந்த பல பாடகிகள் இப்போது என்ன ஆனார்கள் என தெரியவில்லை. இன்றைய இசையமைப்பாளர்களும் அவர்களை கண்டு கொள்வதே இல்லை.