கனடாவுக்கு பயணமான விஜய்

Report
137Shares

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் கனடா, டொரன்டோவிற்கு தனது குடும்பத்துடன் பயணமாகியுள்ளார்.

டொரன்டோவில் நடைபெறவுள்ள ஓரியன்டேஷன் நிகழ்வில், விஜயின் மகன் சஞ்சய் கலந்துகொள்ளவுள்ளமையால் மனைவி சங்கீதா மற்றும் மகள் திவ்யாவுடன் அவர் கனடாவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் டொரன்டோ பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் விஜய் தனது மகளுடன் உணவு உண்ணும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இதேவேளை ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னை நகரில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், ரசிகர்கள் பலரும் கலந்துக் கொண்டனர். தற்போது இந்த பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

5149 total views