மறைந்த கலைஞரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

Report
776Shares

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நேற்று மாலை மருத்துவச் சிகிச்சை பலனளிக்காமல் தனது 94 வயதில் காலமானார்.

5 முறை முதல்வராக இருந்த இவரின் சொத்து மதிப்பைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

2016ஆம் ஆண்டுத் தேர்தலில் திருவாரூரில் இருந்து போட்டி போடும் போது கலைஞர் கருணாநிதி தனது சொத்து மதிப்பை முழுமையாக அரசுக்குச் சமர்ப்பித்தார்.

கலைஞர் பெயரில் சுமார் 13.42 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு அவர் போட்டி போடும் போது கருணாநிதியின் 2014-15ஆம் நிதியாண்டின் வருமானம் 1.21 கோடி ரூபாய். இதில் 50,000 ரூபாய் தொகை கையில் இருப்பாக வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் வங்கி வைப்பு நிதியாக 12.73 கோடி ரூபாய், அஞ்சுகம் பிரிண்டர்ஸ் பங்குகள் மூலம் 10.22 லட்சம் சொத்து வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

கலைஞர் சமர்ப்பித்த அறிக்கையின் படி அவர் பெயரில் அசையா சொத்துக்களோ அல்லது விவசாய நிலமோ எதுவும் இல்லை.

அதேபோல் அவர் மனைவிகளின் பெயரில் 45.34 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதியின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாள் பெயரில் வங்கி வைப்பு நிதியாக 99.67 கோடி ரூபாயும், 6 கோடி ரூபாய் மதிப்பிலான கலைஞர் தொலைக்காட்சியில் 60 லட்சம் பங்குகள் உள்ளது. அதேபோல் 716.34 கிராம் அளவிலான தங்க நகைகள் வைத்துள்ளார், இதன் மதிப்பு 15.65 கோடி ரூபாய் எனச் சொத்து மதிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருணாநிதியின் 3வது மனைவியான ராஜாத்தி அம்மாளிடம் வங்கி வைப்பு நிதியாக 22.88 லட்சம், வெஸ்ட்கேட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் 2.50 கோடி ரூபாய் மதிப்பிலான 25 லட்சம் பங்குகள். 13.98 லட்சம் ரூபாய் மதிப்பிலான 640 கிராம் தங்க நகைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் பெயரில் அசையா சொத்துக்கள், விவசாய நிலம், கார், வீடு என எதுவும் இல்லாத நிலையில், தயாளு அம்மாள் பெயரில் திருவாரூரில் 2,520 சதுரடியில் வீடு, சென்னை சிஐடி காலணியில் ராஜாத்தி அம்மாள் பெயரில் 9,494 சதுரடியில் வீடு உள்ளது.

கடன்

ராஜாத்தி அம்மாள் 1.17 கோடி ரூபாய் அளவிலான கடனை தனது மகளான கனிமொழியிடம் பெற்றுள்ளார்.

இதுமட்டும் அல்லாமல் ராஜாத்தி அம்மாள் பல வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் சுமார் 11.94 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கடனாகப் பெற்றுள்ளார்.

ஆனால் இவரின் வாரிசுகளின் சொத்தை கணக்கிட்டால் பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்பதே உண்மை.

35774 total views