சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கும் படம்- யாருடைய படம் தெரியுமா

Report
18Shares

சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதையடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கும் தகவல் அனைவருக்கும் தெரிந்த்தே. மேலும் அப்படத்தின் தலைப்பு கூட அதிரடி என்று தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி என்ற படத்திலும் சிம்பு நடிக்க இருக்கிறாராம். இதில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் வருகிறாராம்.

நல்ல கதையம்சத்தை கொண்ட படங்களை தரும் இய்க்குனர்களில் ராதாமோகனும் ஒருவர். மேலும் இவர் ஜோதிகாவை வைத்து மொழி என்ற திரைப்படத்தையும் இய்க்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

இந்த காற்றின் மொழி, இந்தியில் வித்தியாபாலன் நடிப்பில் வெளியான துமாரி சூலு என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

1397 total views