ஃபிபா கிண்ணத்தை வெல்லப்போவது யார்? – கணிப்பு நடத்தும் பூனை!

Report
38Shares

ரஷ்யாவில் நடைபெறும் உலக்கிண்ண ஃபிபா கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ரஷ்யா அணி வெல்லும் என ‘அசிலிஷ்’ என்ற பூனை கணித்துள்ளது.

உலகக்கிண்ணப் போட்டிகள் இன்று ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், முதல் போட்டியில் போட்டியை நடத்தும் நாடான ரஷ்யாவும், சவூதி அரேபியாவும் மோதவுள்ளன.

ரஷ்யா நேரப்படி இன்றிரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், ரஷ்யா வெற்றிபெறுமென ‘அசிலிஷ்’ பூனை கணித்துள்ளது.

உலகக்கிண்ண கால்பந்து முடிவுகளை ரசிகர்கள் எந்தளவிற்கு நேரில் சென்று பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களோ அதேபோல், முடிவுகளை முன்கூட்டியே அறிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.

உலகக்கிண்ணத்தை நடத்தும் ரஷ்யா, ஒவ்வொரு போட்டியின் முடிவும் எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தியுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்ஃபார்க் அருங்காட்சியத்தில் உள்ள அந்த பூனைக்கு அனா கசட்கினா என்பவர் பயிற்சியும் வழங்கியுள்ளார்.

2010ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரின்போது, அதன் முடிவுகளை ‘பால்’ (Paull) என்ற ஒக்டொபஸ் கடல் வாழ் உயிரினம் சரியாக கணித்திருந்தது.

ஜெர்மனி அணி மோதிய சகல போட்டிகளையும் துல்லியமாக கணித்த ஒக்டொபஸ், ஸ்பெயின் அணியே கிண்ணத்தை வெல்லும் என்று கூறியிருந்தது. அது நடந்தேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2180 total views