அனிதாவை கொச்சைப்படுத்தும் ஜூலி

Report
50Shares

மருத்துவ கனவோடு படித்து பிளஸ் 2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்ற அரியலூரை சேர்ந்த அனிதா, நீட் நுழைவுத்தேர்வின் காரணமாக மருத்துவபடிப்பிற்கான நுழைவு சீட்டு கிடைக்காமல் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது இறுதி ஊர்வலத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.

அத்தகைய அனிதாவின் 18-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு தரப்பட்ட மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான ஜூலி, அனிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஜூலியை மிகக்கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறன்றனர்.

அதில் ஒருவர், அனிதாவை இதை விட யாரும் கேவலாமாக அசிங்கப்படுத்த முடியாது. உண்மையாக போராடி உயிரை விட்ட பெண்ணின் வாழ்க்கை படத்தில் இந்த பெண் நடிப்பது சரி இல்லை எனவும் ட்விட்டியுள்ளனர்.

3033 total views