ஊடக நிறுவனத்திடம் மிரட்டி கப்பம் கேட்கும் ஊடகவியலாளர்!! கனடாவில் சம்பவம்!!

Report
205Shares

சர்வதேச தமிழ் ஊடக நிறுவனம் ஒன்றை மிரட்டி கப்பம் கேட்கும் ஒரு கனடா ஊடகவியலாளர் பற்றிய செய்தி எமக்கு கசித்துள்ளது.

கனடாவில் பெரும் பொருட் செலவில் மிகப் பிரமாண்டமான மேடை நிகழ்ச்சி ஒன்றை நடாத்துவதற்கு ஒரு சர்வதேச தமிழ் ஊடகம் தயாராகி வருகின்றது.

ஆரம்பத்தில் அந்த நிகழ்வை எதிர்ப்பதாக அறிக்கைவிட்ட ஒரு கனடா வாழ் தமிழ் ஊடகவியலாளர், பின்னர் அந்த ஊடக நிறுன முக்கியஸ்தர்களுடன் நெருங்கிப் பழகி நட்பு பாராட்டிவந்தார்.

நிகழ்ச்சி திகதி நெருங்கிவரும் நிலையில், அந்த ஊடக நிறுவன முகவர்களை இரகசியமாக அனுகிய அந்த ஊடகவியலாளர், ஒரு பெரும் தொகைப் பணத்தை கப்பமாகக் கேட்டுள்ளதுடன், அந்த ஊடக நிறுவனத்தில் தனக்கு வேலை தரவேண்டும் என்று கோரிக்கையயும் விடுத்திருந்தார்.

இவரது பின்புலத்தை ஆராய்ந்து பார்த்த அந்த ஊடக நிறுவனத்தினர், இவரை பணிக்கமர்த்த முடியாது என்று கூற, மேடை நிகழ்ச்சியை தான் குழப்பப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

கனடாவில் நடைபெற இருக்கின்ற மேடை நிகழ்ச்சிக்கு எதிராக சமூகவலைத்தளங்களைப் பாவித்து தான் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும், அந்த நிகழ்ச்சி நடைபெறாமல் தான் தடுக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார்.

இப்படியும் ஒரு ஊடகவியலாளன் இருப்பானா என்று ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்கள், அந்த ஊடக நிறுவனத்தின் நிர்வாகிகள்.

வெறும் 10 பேர் மாத்திரமே பார்க்கும் ஒரு இணையத்தளத்தையும், நான்கு பக்கம் மாத்திரமே உள்ள ஒரு துண்டுப் பிரதியையும் வெளியிட்டுவிட்டு தங்களை ஊடகவியலாளர்கள் என்று கூறிக்கொண்டு திரியும் ஒரு சிலரால், கனடாவில் உள்ள அத்தனை ஊடகவியலாளர்களுக்குமே அசிங்கம்; என்று கூறுகின்றார் கனடாவில் உள்ள ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளர்.

'ஊடகவியலாளர்' என்று தன்னை அழைத்துக்கொள்ளும் இந்த நபர் பற்றிக் கொஞ்சம் 'தேடிப்பார்த்த'போது, முன்னரும் ஒரு மேடை நிகழ்ச்சியை இவர் குழப்பியது பற்றியும், பேரம் பேசலுக்கு ஏற்பாட்டாளர்கள் படியாததால் அவர் இதனைச் செய்தாகவும் தெரியவருகின்றது.

இன்னும் கொஞ்சம் இவர் பற்றி 'தேடிப்பார்'த்துவிட்டு மீண்டு வருகிறோம் உங்களிடம்...