உச்சத்திலிருந்த நடிகை ஒரே ஒரு வீடியோவால் பாதாளத்திற்குள் சென்றுவிட்டார் ! நடிகை தீபிகாவிற்கு இது இப்போ தேவையா..

Report
372Shares

இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை தீபிகா படுகோனே. பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.கடந்த வருடம் பாலிவுட்டில் முன்னணி நடிகரான ரன்வீர்சிங்கை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னரும் நடித்துவரும் தீபிகா படுகோனே. கடந்த வாரம் அவர் நடிப்பில் வெளியான படம் தான் சபக் திரைப்படம். அப்படத்தில் ஆசிட் வீசப்பட்டு முகம் சிதைக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ளார்.அவரின் எந்த முயற்சியையும், நடிப்பையும் பெரும் அளவில் பாராட்டினர்.

ஆனால் ஒரு டிக் டாக் வீடியோவால் அவர் பெயரை அவரே கெடுத்துக்கொண்டார். அந்த வீடியோவில் ஓம் சாந்தி ஓம், பிகு, சபக் திரைப்படங்களில் வரும் அவரின் கதாபாத்திரங்களைப் போல் மேக் அப் போட்டு காமியுங்கள் என ரசிகர்களுக்குச் சவால் விடுத்துள்ளார்.

இதைப் பார்த்துக் கடுப்பான ரசிகர்கள் ட்விட்டரில் "உங்கள் மீது நாங்கள் வைத்திருந்த மரியாதையை கெடுத்துவிட்டீர்கள்". "இது உங்களைப் பற்றியும் நீங்கள் போட்டிருக்கும் மேக் அப் பற்றியும் அல்ல, இது அந்த வாழ்வதற்கே பயந்து கொண்டிருக்கும் பெண்ணை பற்றியது, அவளின் அந்த உண்மையான காயங்கள் நீங்கள் போட்டிருக்கும் மேக் அப்பை போல் கலைத்துவிட முடியாது".