பிக்பாஸில் இருந்து வெளியேறிய பெண் போட்டியாளர்! பாலியல் குற்றச்சாட்டு - இளம் நடிகைக்கு நேர்ந்த சோகம்

Report
389Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி என பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. தெலுங்கில் பிரபல நடிகர் நாகார்ஜூனா பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் போட்டியாளராக கலந்து கொண்டு அண்மையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியவர் ரோகிணி ரெட்டி. அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் நான் பி.டெக் படித்து முடித்திருக்கிறேன்.

சினிமா மீதான ஆர்வத்தில் ஹைதராபாத் எஸ்.ஆர் நகரில் விடுதியில் தங்கி வாய்ப்பு தேடி வந்தேன். சீரியல் வாய்ப்பும் தேடினேன்.

அப்போது ஒரு காமெடி தொடரில் நடிக்க என்னை அழைத்தார்கள். அதில் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். அதனால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டேன்.

அதே போல இன்னொரு பாலியல் தொந்தரவையும் சந்தித்தேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

12352 total views