நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் திடுக்கிடும் தகவலை வெளியிட்ட முக்கிய அதிகாரி! மர்ம மரணத்தின் உண்மை

Report
583Shares

நடிகை ஸ்ரீதேவி கடந்த ஃபிப்ரவரி மாதம் 24 ல் துபாயில் உள்ள ஹோட்டலில் குளியல் அறை தொட்டி வழுக்கி விழுந்து மரணமடைந்தார். இந்த சம்பவம் திரையுலகை சோகமயமாக்கியது.

மேலும் அவரின் மரணம் குறித்து பல சந்தேகங்களும் எழுப்பட்டன. ஆனால் அவரின் குடும்பத்தினர் மரணம் எதிர்பாராதது என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்,

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த டிஜிபி ரிஷிராஜ் சிங், நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல, கொலையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் மரணம் குறித்த விசாரணைக்காக கேரள டிஜிபி தடயவியல் நிபுணர் டாக்டர் உமாடாதனை நாடியுள்ளார்.

மேலும் ரிஷி சிங் தனது நண்பர் கூறியிருக்கிறார் என சொல்லி டாக்டர் உமாடாதன் சொன்ன விஷயங்களை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.

மேலும் ஒரு அடி உயரமே இருக்கும் தண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது. வேறு ஒருவர் அவரது தலையை தண்ணீரில் பிடித்து அழுத்தினால் தவிர, ஒரு அடி தண்ணீரில் நிச்சயம் அவர் மூழ்கி உயிரிழந்திருக்க முடியாது. தேவையான ஆதாரங்கள் கிடைக்காததால் ஸ்ரீதேவியின் மரணம் மர்ம மரணமாகவே முடிந்துவிட்டது என்று தெரிவித்ததாகவும் டிஜிபி கூறியுள்ளார்.

புகைப்படத்தில் தடவியல் நிபுணர் உமாடதன்...

18943 total views