அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட கணவர் - அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட வெயில் படநாயகி!

Report
189Shares

தமிழ் சினிமாவில் ‘வெயில்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா. தொடர்ந்து திருத்தம், செங்காத்து பூமியிலே ஆகிய படங்களில் நடித்தார்.

கடந்த 2012ம் ஆண்டு இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து திருவனந்தபுரத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டார், 2013ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

கடந்த 2015ம் ஆண்டு திருவனந்தபுரம் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி பிரியங்கா மனு தாக்கல் செய்தார். கணவருக்கு எதிராக தனது சமூக வலைத்தள பக்கங்களை தவறாக பயன்படுத்தியது உட்பட 4 வழக்குகளை பதிவு செய்தார்.

இந்நிலையில் தனது கணவரை விவாகரத்து செய்தது ஏன் என்பது பற்றி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கணவர் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டார் என்று கூறியுள்ளார். அதோடு, சினிமாவில் தன்னை மீண்டும் நடிக்க தடை விதித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

எனக்கு நடிப்பு மட்டும்தான் தெரியும். அதனால் மீண்டும் நடிக்க வந்துள்ளேன் என கூறியுள்ளார். பிரியங்காவில் இந்த தகவல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6143 total views