“சம்பளமும் கிடையாது, சாப்பாடும் கிடையாது என்னை அடிமையாக வைத்துள்ளார்” - நடிகர் நகுலின் தற்போதைய நிலை...

Report
1613Shares

தமிழில் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகர் நகுல். இவர் பிரபல நடிகை தேவயானி உடன் பிறந்த தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நடிகர் நகுல் முதன்முறையாக கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் காதலில் விழுந்தேன். அப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மாசிலாமணி, வல்லினம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீப காலமாக இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் வெற்றி பெறாத கரணத்தினால், தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அதில் இவரிடம் டிரைவராக வேலைப் பார்கிறேன், சம்பளம் கிடையாது, அடிமையாக உள்ளேன், சாப்பாடு கிடையாது, நல்ல உடை இல்லை, மிகவும் மோசமான பாஸ் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

50940 total views