பிரபல நடிகை ப்ரியா பவானி ஷங்கரை திருமணம் செய்கிறாரா எஸ்.ஜே.சூர்யா, டுவிட்டரில் அவரே கூறிய அதிரடி பதில்

Report
712Shares

வாலி , குஷி போன்ற படங்களை இயக்கியவர் S.J.சூர்யா. நியூ , அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்களை இயக்கி நடித்தும் இருந்தார். பின்பல படங்களில் நடிக்கத் தொடங்கிய S.J.சூர்யா. இறைவி, மெர்சல், மான்ஸ்டர் போன்ற அவர் நடிப்பில் வெளியாகின. தற்போது பொம்மை எனும் படத்தில் பிரியா பாவனி ஷங்கருடன் நடித்து வருகிறார்.

முன்னதாக மான்ஸ்டர் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர். மேலும் பொம்மை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரியா பவானி சங்கர் பார்ப்பதற்குக் கொஞ்சம் சிம்ரன் மற்றும் திரிஷா போலத் தெரிகிறது இல்லையா" என S.J.சூர்யா பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் பொம்மை படப்பிடிப்பில் நடிகை பிரியா பவானி சங்கரிடம் தனது காதலைத் தெரிவித்ததாகவும் அதை அவர் ஏற்க மறுத்து விட்டதாகவும் தகவல்கள் இணையதளத்தில் பரவிவந்தன.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார் S.J.சூர்யா: " பிரியா பவானி சங்கரைக் காதலிப்பதாக நான் அவரிடம் சொன்னதாகவும், காதலை ஏற்க அவர் மறுத்துவிட்டதாகவும் தவறான தகவல் பரவி உள்ளது. மான்ஸ்டர் படத்திலிருந்து எனக்கு அவர் சிறந்த தோழியாக இருக்கிறார். அவர் ஒரு திறமையான நடிகை. தயவு செய்து அடிப்படை இல்லாத தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.