பிக்பாஸ் பிரபலத்தின் சொகுசு பங்களாவில் புதைந்து கிடந்த பிணம்! மர்ம மரணம், தற்கொலையா? அதிர்ச்சியாக்கிய உண்மை சம்பவம்

Report
288Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், மராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 3 ஐ பிரபல நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார்.

அவர் அண்மையில் தெலுங்கானா, மஹாபப் நகர் பப்பிரெட்டிகுடாவில் 40 ஏக்கர் பரப்பு கொண்ட பண்ணை வீட்டை வாங்கியுள்ளார். அங்கு சுத்தம் செய்ய வேலையாட்களை அவர் அனுப்பியிருந்தார். அப்போது பல வருடங்களாக பயன்படுத்தாமல் இருந்த பழைய கட்டிடம் ஒன்றை செய்த போல துர்நாற்றம் வீசயது.

என்ன வென தேடிய போது அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. உடனே கிராம அலுவலர் மூலம் போலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் கிடைத்த எலும்புகூடுகளை சேகரித்து விசாரணை நடத்தியதில் ஆறு மாதங்களுக்கு முன் யாரோ தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

யார் அவர்? என்ன நடந்தது என விசாரணை மேலும் வலுத்துள்ளது.