பெண்ணாக மாறி நடித்த நடிகருக்கு நேர்ந்த சோகம்! அச்சத்தில் படக்குழு

Report
288Shares

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஜெய சூர்யா. தமிழில் என்மனவானில் என்ற படத்தில் நடித்திருந்தார். அண்மையில் ஒரு படத்தில் பெண்ணாக நடித்திருந்தார்.

தற்போது கேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழாவை மையாக வைத்து எடுக்கப்படும் திருச்சூர் பூரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயமானது. உடனே படக்குழு அவரை மருத்துவமனையில் அனுமதித்தது.

உண்மையில் அவர் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து சண்டைக்காட்சியில் நடித்து வந்ததே அவரின் உடல் நிலை சோர்வாக காரணம் என சொல்லப்படுகிறது.

தற்போது அவர் ஓய்வில் இருப்பதால் சில நாட்களுக்கு பின் படப்பிடிப்பில் மீண்டும் இணைவாராம்.