செல்பி எடுக்க முடியாததால் முன்னணி நடிகர் வீட்டின் முன்பே தீக்குளித்த ரசிகர்!

Report
82Shares

நடிகருக்கும் ஒரு ரசிகருக்கும் உண்டான பிணைப்பு என்பது கடந்த தலைமுறையில் இருந்தே மிக வலிமையானதாக தான் உள்ளது. கன்னடத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகர் யாஷ்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த KGF படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவரது பிறந்தநாள் கடந்த 8ஆம் தேதி சென்றது. ஆனால் அதற்கு சில நாட்கள் முன்பே கன்னட சூப்பர் ஸ்டார் ஆம்பரீஷின் மரணத்தால் பிறந்த நாளை கொண்டாட போவதில்லை என கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இது கடந்த எல்லா வருட பிறந்தநாளின் போதும் யாஷை சந்தித்து செல்பி எடுத்து கொள்ளும் அவரது தீவிர ரசிகர் ரவி ரகுராம் என்பவருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மிகுந்த மனமுடைந்த அவர் யாஷின் வீட்டின் முன்பே தீக்குளித்துள்ளார். அவரை அங்கிருந்த காவலாளிகள் மீட்டு மருத்துவமனை சேர்த்துள்ளனர்.

அங்கு 80 சதவீதம் எரிந்த நிலையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் ரவியை சமீபத்தில் யாஷ் பார்த்து விரைவில் குணமாக வேண்டி கொண்டு வந்துள்ளார்.

3327 total views